திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உதயநிதியைக் குறிவைத்துச் சில திட்டமிட்ட நடவடிக்கைகளை முதல்வர் விஜய் கையாண்டதாகவும், தற்பொழுது நீதிமன்றத்தின் மூலம் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னால் அரசியல் சதி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டு நீதியை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான உரிய உத்தரவுகளை இன்றிரவுக்குள் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் முதல்வர் விஜய்யின் எண்ணமும் சதித்திட்டமும் முற்றிலுமாகத் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“>

 

இந்த அதிரடி அறிக்கையானது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், அனல் பறக்கும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.