விமானப் பயணத்தின் போது எதிர்பாராமல் ஏற்படும் கடுமையான கொந்தளிப்பு எத்தகைய சேதத்தை உண்டாக்கும் என்பதற்குச் சான்றாக, ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு திகில் அனுபவத்தைச் சந்தித்துள்ளனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென சுமார் 300 அடிகள் கீழே சரிந்து விழுந்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டதில், விமானத்திற்குள் இருந்த 12 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அமைதியாகச் சென்றுகொண்டிருந்த பயணம் ஒரே நொடியில் பேர அச்சமாக மாறிய இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த விமானப் பயணிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த போது விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்தக் கடுமையான அதிர்வினாலும், விமானம் சட்டெனக் கீழ்நோக்கி இறங்கியதாலும் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தங்களின் இருக்கைகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
சீட்பெல்ட் அணியாத பயணிகள் பலர் விமானத்தின் மேற்கூரையில் மோதி பலத்த காயமடைந்தனர். “நாங்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தோம், அடுத்த நொடியே நாங்கள் காற்றில் பறந்து தலைகீழாக மோதினோம், மரணத்தின் விளிம்பையே தொட்டுப் பார்த்தது போல் இருந்தது” என்று பயணிகள் தங்கள் அலறல் நிறைந்த திகில் அனுபவத்தைக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தத் திடீர் விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக விமானக் குழுவினரால் முதலுதவி அளிக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும், காயமடைந்த 12 பேரும் அவசரமாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நடுவானில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு அல்லது மோசமான வானிலைக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானப் பயணங்களின் போது இருக்கையில் அமர்ந்திருக்கும் வரை சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை இந்தத் திகில் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
#WATCH | Delhi: Several passengers injured after Air India flight encounters severe air turbulence while travelling from Phuket to Delhi pic.twitter.com/OM1lXKRKcm
— ANI (@ANI) August 4, 2026
“>
