சாலைகளில் மனிதர்கள் மட்டுமல்லாது பிற உயிரினங்களும் பயணிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன என்பதை மறந்து, சிலர் காட்டும் மனிதநேயமற்ற அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சாலையில் அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடப்பதற்காகப் பல வாகனங்கள் பொறுமையுடன் நின்று வழிவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதிவேகமாக வந்த ஒரு கார் அந்தப் மலைப்பாம்பின் மீது ஏறிச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று, அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய சாலையில் ஒரு பெரிய மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடக்க முயன்றது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அனைவரும் அந்த உயிரினத்திற்கு எவ்வித இடையூறும் செய்யாமல், அது பாதுகாப்பாகக் கடந்து செல்ல வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு தங்களது வாகனங்களை நிறுத்தி அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அதே சாலையில் மிக அதிவேகமாக வந்த ஒரு சொகுசுக் கார், சாலையில் பாம்பு இருப்பதையும் மற்ற வாகனங்கள் நின்று கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், கொஞ்சமும் இரக்கமின்றி அந்தப் பாம்பின் மீது காரை ஏற்றிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டது. கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த சக வாகன ஓட்டிகளால் படம் பிடிக்கப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இக்காட்சி இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில், “மற்ற வாகன ஓட்டிகள் காட்டிய மனிதநேயத்தையும் பொறுமையையும் அந்த ஒரு கார் ஓட்டுநர் பாழாக்கிவிட்டார்” என்றும், “விலங்குகளின் மீது சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்ட அந்தச் ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

“>