நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
இது இவரது திரைப்பயணத்தின் கடைசிப் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் மிகுந்த சோகத்துடனும் கண்ணீருடனும் வெளியேறி வருகின்றனர்.
இப்படத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் எண்ட் கிரெடிட்ஸ் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் நாயகனாக அறிமுகமான முதல் திரைப்படத்தில் தொடங்கி, அவர் நடித்த கடைசிப் படம் வரையிலான முக்கியத் தருணங்களை ஒன்றிணைத்து இறுதி இரண்டு நிமிடங்களுக்கு உணர்ச்சிகரமான காட்சிகள் திரையிடப்படுகின்றன.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏராளமான எமோஷனலான காட்சிகள் திரையரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைக் கண் கலங்கச் செய்துள்ளன.
#JanaNayagan Last 2 Minutes Emotional Clips 😭💔 pic.twitter.com/1QvfikwTuR
— 𝐒𝐚𝐤𝐭𝐡𝐢 𝐀𝐠𝐫𝐢 𝑻𝑽𝑲 (@mersal_sakthi03) July 23, 2026
“>
பலரும் அழுகையுடன் தியேட்டரை விட்டு வெளியேறும் இந்த நெகிழ்ச்சியான கணங்கள் தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பரவி வருகிறது.
