முதலமைச்சர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால், திரையரங்குகளில் படம் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தவெக அமைச்சர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியபடி படத்தை ரசித்தனர்.
இந்நிலையில், இது குறித்து விமர்சித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தியேட்டரில் அமர்ந்து கொண்டு இப்படி அழுது சீன் போடக்கூடாது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இவரின் இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேமலதாவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நெட்டிசன்கள் அவரின் பழைய காணொளி ஒன்றைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட அவரது திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற பிரேமலதா, அங்கே தியேட்டருக்குள் அமர்ந்து கதறி அழுதிருப்பார்.
தியேட்டர்கலீல் அழுது scene ஒட்டக்கூடாது …..
உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா 😂 pic.twitter.com/HUN0n2m5D6
— Kaaviya~TVK (@kaaviyaTVK) July 24, 2026
அந்தப் பழைய வீடியோவை தற்போது ‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகளோடு இணைத்துப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “உங்களுக்கு வந்தா ரத்தக் கண்ணீர், மத்தவங்களுக்கு வந்தா சீன் போடுறாங்களா? உங்களுக்கொரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?” என்று பிரேமலதாவைச் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கேள்வி எழுப்பி வச்சு செய்து வருகின்றனர்.
