நொய்டாவிலிருந்து டெல்லியின் லக்ஷ்மி நகர் வரை ஒரு பெண் கேப் ஒன்றில் பயணம் செய்துள்ளார். பயணம் முடிவடைந்ததும், அந்தப் பெண் கேப் டிரைவருக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால், டிரைவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், கேப் டிரைவரைப் பார்த்து சவாலாக, “உன்னால் முடிந்தால் என்னிடமிருந்து பணத்தை வாங்கிப் பார்” என்று கத்தியதோடு, டிரைவர் தன்னிடம் ரவுடித்தனம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“>

இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த பெரும்பாலான இணையவாசிகள் அந்தப் பெண்ணின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஏழைத் தொழிலாளியின் உழைப்பை ஏமாற்றிவிட்டு, அதற்குப் பரிகாரமாகத் திமிராகப் பேசும் இந்த வக்கிரப் புத்தியுடைய பெண் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநருக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதே வேளையில், இந்தச் சம்பவத்திற்கு இணையத்தில் சில மாறுபட்ட கருத்துக்களும் எழுந்துள்ளன. ஓட்டுநர்கள் சில நேரங்களில் வாடிக்கையாளர்களிடம் மிக மோசமாக மற்றும் அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும், ஒருவேளை இந்த ஓட்டுநரும் அப்பெண்ணை வீட்டின் பின் பக்கத்தில் இறக்கிவிட்டது போன்ற ஏதேனும் தவறுகளைச் செய்திருக்கலாம் என்றும் அதனால் தான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

எனினும், இரு தரப்பிலும் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளதால், உண்மை என்ன என்பதை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.