உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்கள் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பாலத்திற்கு வந்த நிலையில், கடைசி நேரத்தில் நடந்த மாற்றங்களால் அங்கு பெரும் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது.

நேரில் பார்த்தவர்களின் தகவல்படி, அந்த இளஞ்சோடி நீண்ட நேரம் பாலத்தின் விளிம்பில் நின்று பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஆற்றில் குதிக்கத் தயாராகினர். திட்டமிட்டபடியே அந்த இளைஞன் ஆற்றில் குதித்த நிலையில், அவனது காதலி குதிப்பதற்குத் தயங்கி, திடீரென அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஸ்கூட்டரைக்கூட எடுக்காமல் அவர் அங்கிருந்து கிளம்பியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆற்றில் குதித்த இளைஞனை அங்கிருந்த மூழ்காளர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு பாதுகாப்பாக மீட்டனர். தற்போது அந்த இளைஞன் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

“>

 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் நிர்வாகம் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என்றாலும், காதலியின் இத்தகைய திடீர் செயலும், தற்கொலை முயற்சிக்குக் பின்னணியில் இருந்த மர்மமும் இணையத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.

சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண்ணின் செயல் குறித்தும், இவர்களின் இந்த விபரீத முடிவு குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.