பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில், காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே ஸ்வேதா என்ற ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்வேதா இறப்பதற்கு முன் எழுதியுள்ள தற்கொலை கடிதத்தில், “அம்மா என்னை மன்னித்துவிடு” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது இந்த முடிவுக்குத் திருமண வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த கடுமையான துன்புறுத்தல்களும், மன உளைச்சல்களுமே காரணம் என்று அவர் அதில் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த தற்கொலைக்கான பின்னணி மற்றும் வரதட்சணை அல்லது குடும்பத் துன்புறுத்தல் ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
