கேரள மாநிலம் கண்ணூரில், உதட்டில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை ஒன்று, சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் போது உதட்டில் காயம் ஏற்பட்டதால், அந்தக் குழந்தைக்குச் தையல் போடுவதற்காக மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். ஆனால், மருந்து செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அந்தப் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவரின் அஜாக்கிரதையான சிகிச்சையே குழந்தையின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய காயத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற இடத்தில் மயக்க மருந்து காரணமாக ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
