டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த பொழுது தாகத்திற்காகத் தண்ணீர் கேட்டுள்ளார்; அப்போது அருகிலிருந்து கடையில் இருந்து கொண்டு வரப்பட்ட பாட்டில் திரவத்தை அவர் குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது தொண்டை கருகி, உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

“>

முதற்கட்ட விசாரணையில் அவர் தண்ணீர் என்று நினைத்துக் குடித்தது உயிருக்கு ஆபத்தான ‘ஆசிட்’ ஆக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.