ஒடிசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, சினிமா பட பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, ஏடிஎம் இயந்திரத்தையே காரில் கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துள்ள துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த அந்தப் பகுதியை அதிர வைத்துள்ளது.
ஏடிஎம் மையத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 பேர் புகுந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள், அங்கிருந்த ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து, முழு ஏடிஎம் இயந்திரத்தையும் தங்களது கருப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்துடன் தடிமனான கயிற்றால் பிணைத்துள்ளனர்; பின்னர் காரை வேகமாக இயக்கி ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பிடுங்கி, சாலையோரமாக இழுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
ओडिशा में ATM चोरी का अनोखा अंदाज, थार से मशीन को बांध फरार हुए बदमाश
◆ बदमाशों ने ATM कियोस्क का दरवाजा तोड़ा, रस्सी से पूरी एटीएम मशीन को थार से बांधा और मशीन को उखाड़कर सड़क पर घसीटते हुए वहां से फरार हो गए#Odisha | #ATM | #Thar | Thar | Odisha ATM pic.twitter.com/ABnCKFGrsz
— News24 (@news24tvchannel) July 11, 2026
“>
இந்த வினோத மற்றும் துணிகரக் கொள்ளைச் சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் துல்லியமாக பதிவாகியுள்ள நிலையில், இந்தச் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்து தார் காரில் வந்த கொள்ளைக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
