சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில விசித்திரமான காட்சிகள் நெட்டிசன்களின் கவனத்தை சட்டென்று ஈர்த்துவிடுகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோவில், பலத்த மழை காரணமாக உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிற்குள் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் புகுந்துள்ளது.

ஜிம்மின் தரைத்தளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிலும், அங்கிருக்கும் இளைஞர்கள் சற்றும் சளைக்காமல் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கின்றனர். சிலர் தீவிரமாக வெயிட் தூக்கிக் கொண்டிருக்க, வேறு சிலரோ தண்ணீருக்குள்ளேயே ஜிம்மிற்குள் இங்கும் அங்கும் உலா வரும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த விசித்திரமான சம்பவம் எங்கு நடந்தது என்ற விபரம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், தண்ணீருக்குள் இளைஞர்கள் ஒர்க்அவுட் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

 

எக்ஸ் (X) தளத்தில் ‘@Truecircle7’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு, “500 ரூபாய் கொடுத்து ஜிம்மில் சேர்ந்தால் இப்படித்தான்” என்று நகைச்சுவையாகக் கேப்ஷன் இடப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களின் பாணியில் கமெண்ட்டுகளைத் தட்டிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், “இதுதான் இந்தியாவின் முதல் அக்வா தெரபி ஜிம் போல!” என்று கிண்டல் செய்துள்ளார்.