“என் மகள் கிளாஸ் ரூம்ல கைகூப்பி அழுதுகிட்டே டீச்சர்கிட்ட உதவி கேட்டுருக்கா, ஆனா அந்த ஆசிரியை அவளை மிரட்டுற மாதிரி நடந்துக்கிட்டதால்தான் என் பிள்ளை பயந்துபோய் நாலாவது மாடியில இருந்து குதிச்சுட்டா!” என்று ஜெய்ப்பூரில் கடந்த 2025 நவம்பரில் நடந்த 9 வயது பள்ளி மாணவி அமாய்ராவின் தற்கொலை வழக்கில், சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு தற்பொழுது அதிர்ச்சியூட்டும் புதிய கிளாஸ் ரூம் சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ள அவளது பெற்றோர் கதறி அழுத்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியெடுத்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல நீர்ஜா மோடி பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த அமாய்ரா, கடந்த 18 மாதங்களாகப் பள்ளியில் உள்ள சக மாணவர்களால் பாலியல் ரீதியான கெட்ட வார்த்தைகள் மற்றும் கடுமையான புல்லிங் (Bullying) கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவளது மரணத்திற்கு முந்தைய கடைசி நிமிட சிசிடிவி காட்சிகளை அவளது பெற்றோர் வாய்ஸ்ஓவர் கொடுத்து தற்பொழுது இணையத்தில் பொதுவெளியில் பகிர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இதயத்தை நொறுக்கும் வீடியோவில், அமாய்ரா சாதாரணமாக வகுப்பறைக்குள் நுழைந்து நடனப் பயிற்சிகளில் ஈடுபடுகிறாள்; ஆனால், சில நிமிடங்கள் கழித்து சில மாணவர்கள் ஒரு டிஜிட்டல் சிலேட்டைக் கொண்டு வந்து அவளிடம் காட்டிய பிறகு அவளது முகம் அப்படியே மாறி, பயமும் அவமானமும் அவளுக்குள் தொற்றிக்கொள்கிறது.
உடனே பதற்றமடைந்த அந்த 9 வயதுக் குழந்தை, கிளாஸ் டீச்சரான பூனிதா சர்மாவிடம் சென்று கைகூப்பி அழுதுகிட்டே உதவி கேட்கிறாள்; தலையைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே மீண்டும் மீண்டும் ஆசிரியையிடம் முறையிடுகிறாள்.
ஆனால், அவளைத் தனியாக அழைத்து விசாரித்துத் தண்டிக்காமல், மற்ற மாணவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அந்த ஆசிரியை மிகவும் கண்டிப்புடனும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொண்டதாக அமாய்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக மனமுடைந்த அந்தச் சிறுமி, திடீரென வகுப்பறையை விட்டுத் தனியாக வெளியே ஓடுகிறாள்.
On Nov 1, 2025, Amaira, a Class 4 student, died by suicide after jumping from the fourth floor of the Neerja Modi School in Jaipur.
She had been bullied for 18 months, with classmates targeting her using “bad words,” many of which carried sexual undertones. However, her class… pic.twitter.com/iiS4J6UFwm
— THE SKIN DOCTOR (@theskindoctor13) July 9, 2026
“>
அமாய்ரா அப்படி அழுதுகொண்டே ஓடியும் கூட, வகுப்பறையில் இருந்த ஆசிரியையோ அல்லது பள்ளியின் ஊழியர்களோ அவளைப் பின்தொடர்ந்து சென்று தடுக்க முயலவில்லை என்ற அலட்சியம் இந்த வீடியோவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தரைத்தளத்தில் இருந்து 48 அடி உயரமுள்ள பள்ளியின் 4-வது மாடிக்கு அந்தச் சிறுமி தனியாகச் செல்லும் வரை யாரோடும் அவளைக் கண்காணிக்கவில்லை என்பதும், அங்கிருந்து குதித்துத்தான் அவள் பரிதாபமாக உயிரிழந்தாள் என்பதும் தற்பொழுது உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் சௌரப் மோடி, முதல்வர் இந்து துபே மற்றும் ஆசிரியை பூனிதா சர்மா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், செல்வாக்கு மிக்கவர்கள் தலையிட்டு முதல்வர் இந்து துபேயைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அமாய்ராவின் தந்தை விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்டதாகக் கண்ணீர் வடித்த தாய் ஷிவானி, தனது மகள் அன்று பத்திரமாக வீட்டிற்குத் திரும்பியிருந்தால் எல்லாவற்றையும் கூறியிருப்பாள், அவளுக்கு அந்த வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது என்று கூறியதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யும் வரை தங்களது நீதிக்கான போராட்டம் ஓயாது எனப் பெற்றோர் கூறியுள்ளார்கள்.
