சுயநலமிக்க இந்த உலகில் மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சாலையோரம் மயங்கி கிடந்த ஒரு குரங்கின் உயிரைக் காப்பாற்ற இரண்டு இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பரவி வருகிறது.

கூட்டம் அதிகமாக இருந்த ஒரு மார்க்கெட் பகுதியில், குரங்கு ஒன்று முற்றிலும் சுயநினைவை இழந்து, சலனமே இல்லாமல் செத்த உடம்பு போலக் கிடந்ததைக் கண்டு சுற்றியிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே நின்ற வேளையில், அங்கு வந்த இரண்டு நபர்கள் ஒரு நொடி கூட யோசிக்காமல் ஓடிச்சென்று அதற்கு முதலுதவி செய்யத் தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by I Love Barpeta (@ilovebarpeta.ig)

“>

நெஞ்சை மெதுவாக அழுத்தி,கைகால்களைத் தேய்த்து விடுத்த அயராத போராட்டத்திற்குப் பலனாக, சில நிமிடங்களில் அந்தப் பிராணி மெதுவாகக் கண் விழித்து எழுந்து நடக்கத் தொடங்கிய நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்பதும், “மனிதர்களை விட இந்த ஊமை ஜீவன்களுக்குச் செய்த உதவி தான் கடவுளுக்குச் சமம்” என்று அந்த இளைஞர்களை பாராட்டி வருகின்றன.