நந்தி கிராம் விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியைச் சுபநிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 6-ம் தேதி, ரயிலில் பயணம் செய்த தம்பதியினர், தங்கள் பயணத்தை விசேஷமாக்க ஆன்லைன் மூலம் ஒரு தனியார் அலங்கார நிறுவனத்தை அணுகி, ரயிலின் உள்ளே தங்களின் கேபினை அலங்கரித்துள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அனுமதியின்றி அலங்கார நிபுணர்களை ரயிலுக்குள் அனுமதித்ததற்காக, சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணைக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வேயின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இது ஒரு கடுமையான கவனக்குறைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக, பயணிகள் தங்கள் கேபினைத் தாங்களாகவே அலங்கரித்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும்.
What’s happening here 🥺😭🥺😭🥺😭 pic.twitter.com/PGW1TqmyWc
— Godman Chikna (@Madan_Chikna) July 7, 2026
“>
இந்தச் சம்பவத்தில் வெளி நபர்கள் ரயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது தான் முக்கிய விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த மக்கள், இது போன்ற செயல்கள் ரயில் பயணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
