இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் விடுமுறைக் கொள்கைகள் மற்றும் வேலை சூழல் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், சமூகவலைதளத்தில் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள எச்ஆர் மேனேஜரின் வாட்ஸ்அப் சாட் மற்றும் மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வேலை நேரத்திற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே எச்ஆர்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விடுமுறை கோரிய ஊழியருக்கு, “திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் விடுமுறை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முறையான காரணம் இல்லாமல் விடுமுறையை ஏற்க முடியாது” என்றும் ஹெச்ஆர் பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் சிசியில் வைத்து அனுப்பப்பட்ட அந்த மெயிலில், திங்கள், சனிக்கிழமை அல்லது பொது விடுமுறை நாட்களுக்கு முன்னும் பின்னும் லீவு எடுத்தால் அது ‘சம்பளம் இல்லாத விடுமுறை’ கருதப்படும் என்றும், ஜோஹோ தளத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், “வாரத்தில் சனிக்கிழமைகளில் வேலை வாங்கும் நிறுவனமே ஒரு பெரிய ஆபத்து என நெட்டிசன்கள் பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை அந்த நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர்.
