உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில், திருமண உறவில் இருக்கும் தன் மனைவி தனது கள்ளக்காதலனுடன் பொதுவெளியில் சுற்றித் திரிந்ததை கணவர் கையும் களவுமாகப் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில், தன் மனைவிக்கு எதிராக ஜீவனாம்சம் மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் அந்த நபர் தொடர்ந்து போராடி வருகிறார்.

மேலும் சட்டப்பூர்வமாக இன்னும் பிரியாத நிலையிலும், கணவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மற்றொரு நபருடன் சுதந்திரமாகத் சுற்றித் திரியும் மனைவியின் இந்தச் செயல், தற்போதைய குடும்ப நலச் சட்டங்கள் எந்த அளவிற்கு ஒருதலைப்பட்சமாக இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

இதனால் “கணவன் பணம் செலுத்த, காதலன் சுகபோகங்களை அனுபவிக்கிறான்; ஆனால் சட்டம் இன்னும் அந்த மனிதனிடம் அவனது வேதனையை நிரூபிக்குமாறு கேட்கிறது” என்று இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது திருமணமே அல்ல, இது ஆண்களைச் சட்டப்பூர்வமாக அவமதிக்கும் மற்றும் சித்திரவதை செய்யும் ஒரு செயல் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இச்சம்பவம், குடும்ப அமைப்பில் கணவன்மார்கள் சந்திக்கும் மன உளைச்சல்களையும், தற்காலச் சட்டங்களில் ஆண்களுக்கான பாதுகாப்பு எந்தளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதையும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக்கியுள்ளது.