மும்பையின் தாதர் ரயில் நிலைய தண்டவாளத்தில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர். என்ன நடந்தது என்ற முழுமையான பின்னணியைக் கண்டறிய ரயில் நிலையம் முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலிஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
रेलवे ट्रैक पर महिला की बेरहमी से मारपीट करता दिखा युवक!!!
मुंबई के दादर रेलवे स्टेशन पर हैरान कर देने मंजर
महिला के साथ उसके पति द्वारा मारपीट की जा रही
लोग तमाशबीन बने रहे,
वीडियो सोशल मीडिया पर वायरल pic.twitter.com/SV9wJ9N6yF
— Journalist Fatima ✍️ (@mahsharfatima86) July 7, 2026
“>
மேலும் வைரலான அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டவாளத்தில் வைத்து ஒருவர் தாக்கியதும், பின்னர் அவருக்கு ரயில் நிலையத்தில் உணவு வழங்கப்பட்டு, பாதுகாப்பாக மற்றொரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களையும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் மற்றும் அதற்கான காரணம் என்ன என்பதையும் கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
