ஒடிசா மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்ற பெயரில் அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்த மாநில அரசின் செயலுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சம்பல்பூர் பகுதியைச் சேர்ந்த பெயின்சா என்ற அரசு ஊழியர் மீது தொடரப்பட்ட துறை ரீதியான விசாரணை எவ்வித முடிவும் எட்டப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததோடு, அவரது வாழ்வாதாரத்திற்கான ஊதியமும் முடக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஒரு ஊழியரின் சம்பளத்தை இவ்வளவு நீண்ட காலம் நிறுத்தி வைப்பது சட்டவிரோதமானது” என்று சுட்டிக்காட்டியதுடன், நிலுவையில் உள்ள முழு ஊதியத்தையும் அடுத்த 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.