சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்த ஒரு லாரியில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மாம்பழங்களை போட்டி போட்டுக்கொண்டு திருடிச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

மேலும் லாரி ஓட்டுநரின் நிலை என்ன என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், விழுந்து கிடந்த பழங்களை மக்கள் அள்ளிச் சென்ற இந்தச் செயல், மனிதநேயமற்றது எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த மாம்பழங்கள் அந்த ஓட்டுநரின் அல்லது வியாபாரியின் வாழ்வாதாரம் என்பதை உணராமல் மக்கள் இப்படி நடந்து கொண்டது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

“>

அதோடு இவ்விபத்து நடந்த துல்லியமான இடம் மற்றும் ஓட்டுநரின் தற்போதைய நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், விபத்து போன்ற அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவ முன்வராமல், தங்களின் சுயநலத்திற்காகப் பொருட்களை அள்ளிச் செல்லும் பொதுமக்களின் இத்தகைய நடத்தை சமூகப் பொறுப்பற்றது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் “மனிதநேயம் இறந்துவிட்டது” என்றும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.