லண்டனை விட இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும்போது தனக்கு பதற்றமும் பயமும் குறைவாக இருந்ததாக எம்மா என்ற வெளிநாட்டுப் பயணி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து லண்டனில் நடப்பது போல, எந்நேரமும் நமது பொருட்களை யாராவது திருடிவிடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் தனக்கு ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் தனது மொபைல் போன் இரண்டு முறை திருடு போனதாகவும், ஆனால் இந்தியாவில் ஒருமுறை கூட அப்படி நடக்கவில்லை என்றும் அவர் தனது அனுபவத்தை ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
Foreigner says she felt less stressed using phone in India than in London: ‘Never had that watch your stuff feeling’ https://t.co/LxbCJXkEfA
“>
இந்த பதிவிற்கு இணையவாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர் இது வெறும் “வியூஸ்காக” செய்யப்பட்ட பதிவு என்று விமர்சித்தாலும், லண்டன் மற்றும் இந்தியா ஆகிய இரு இடங்களிலும் வாழ்ந்த பல பயனர்கள் எம்மாவின் கருத்தை ஆமோதித்துள்ளனர்.
இந்நிலையில் லண்டனில் சமீபகாலமாக பைக் மற்றும் சைக்கிள்களில் வந்து மொபைல் போன்களைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த ஒப்பீடு உண்மைதான் என்றும், உலகளவில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்துக் காட்டப்படும் பிம்பம் முற்றிலும் உண்மை அல்ல என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
