தமிழகத்தை உலுக்கிய கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வளையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரும் இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே டெல்லிக்கு விசாரணைக்கு சென்ற நிலையில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய புள்ளிகள் பலரும் விசாரணைக்காக சென்றுள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கரூர் சம்பவத்தில் காவல்துறையை வைத்து மக்களை திமுக கொன்று குவித்ததாக ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட நிலையில் நாளையே விசாரணை நடத்த இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
