துருக்கியின் டெனிஸ்லி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பாதுகாப்பு வலையில் சிறுமி ஒருவர் சிக்கித் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சிறுமி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது தாயார் சுமார் 10 நிமிடங்கள் வரை உறுதியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு போராடினார்.
உயிருக்குப் போராடும் அந்தச் சூழலில், தாயார் அச்சத்தில் “நான் பயப்படுகிறேன்” என்று கதற, மீட்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர், “எந்தக் கவலையும் வேண்டாம், என் உயிரே போனாலும் சரி, நான் அவளை எப்படியாவது காப்பாற்றிவிடுவேன்” என்று தைரியம் கூறினார்.
அந்தத் தீயணைப்பு வீரரின் உறுதியான வார்த்தைகள் தாய்க்குப் பெரும் நம்பிக்கையை அளித்தன. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில், தாயின் துணிச்சலும் தீயணைப்பு வீரரின் அர்ப்பணிப்பும் ஒன்றிணைந்ததால், அந்தச் சிறுமி எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார்.
🔴 Denizli’de bir çocuk, balkonun koruma filesinin dışında asılı kaldı. 10 dakika boyunca kızının elini bırakmayan anne ile itfaiye eri arasında duygusal bir diyalog yaşandı:
➖Anne: “Korkuyorum”
➖İtfaiye eri: “Hiç merak etme ben ölürüm, onu kurtarırım.” pic.twitter.com/ti2oE9cmw7
— SİYAH SANCAK (@siyahsancakx) July 3, 2026
“>
தாயின் பாசப் போராட்டமும், உயிரைக் காப்பாற்றத் துணிந்த தீயணைப்பு வீரரின் வீரமும் தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழச் செய்து வருகிறது.
