நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜய்யும் தங்களை முன்னிறுத்தி வரும் வேளையில், முதன்முறையாக தவெக கட்சிக்குள்ளேயே நடந்துள்ள ஊழல் அம்பலமாகி இருப்பதாக சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் ‘வழக்கறிஞர் அணி’ என்ற ஒன்று இருக்கும். தேர்தல் முடிந்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியில் உள்ள முக்கியமான நபர்களுக்கு மாவட்டங்கள் முழுவதும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவிகள் வழங்கப்படுவது வழக்கம்.

கிட்டத்தட்ட 50 முதல் 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட இந்த திராவிடக் கட்சிகள், நீதிமன்றங்களில் குறைந்தது 7 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்களை மட்டுமே தகுதி அடிப்படையில் இந்த அரசுப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தனது வீடியோவில் சாட்டை துரைமுருகன் விவரித்துள்ளார்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு வெறும் இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், அக்கட்சியின் வழக்கறிஞர் அணியில் உள்ள பெரும்பாலானோர் சமீபத்தில் சட்டப்படிப்பை முடித்தவர்களாகவும், நீதிமன்றங்களில் பிராக்டிஸ் செய்த போதிய பணி அனுபவம் இல்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள் என்று சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

“>

 

அப்படிப்பட்ட சூழலில், எந்தவொரு தகுதியோ, அனுபவமோ இல்லாத சிலருக்கு, தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் சிலர் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, முறைகேடான வழியில் அரசு சார்பு வழக்கறிஞர் பதவிகளைப் பெற்றுத் தருவதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழலை ஒழிப்போம் என்று கூறிவிட்டு, கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே தவெக-வினர் இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் சாடி அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி பயங்கர வைரலாகி வருகிறது.