நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர், இரு லாரிகளுக்கு இடையே மிகக் குறுகிய இடைவெளியில் தனது வாகனத்தைச் செலுத்தி, பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே மற்றொரு லாரி குறுக்கே வந்ததால், பிரேக் போடாமல் மிகத் துணிச்சலாக இக்கட்டான அந்த இடைவெளிக்குள் தனது லாரியை ஓட்டுநர் நுழைத்தார்.

அப்போது லாரியின் சக்கரங்கள் அந்தரத்தில் தூக்கி, வாகனமே கவிழ்ந்துவிடும் என்ற நிலையில், தெய்வாதீனமாக ஓட்டுநர் லாரியை நிலைநிறுத்தி விபத்தைத் தவிர்த்தார்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன், பலரும் அந்த ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு அபாயகரமான ஸ்டண்ட், மரணத்தை விலை கொடுத்து வாங்குவது போன்றது என்றும், இது போன்ற ஓட்டுநர்களால்தான் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

அதே சமயம், இவ்வளவு ஆபத்தான சூழலிலும் லாரி கவிழாமல் தப்பியது அந்த ஓட்டுநரின் அதிர்ஷ்டம் என்று சிலர் வியந்து பேசினாலும், இதுபோன்ற செயல்கள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.