தற்போதைய தவெக ஆட்சியைத் திரைமறைவில் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வரும் ஜூலை 15-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவல் (Judicial Custody) விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தவெக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வாக்களிக்கும்படி, தவெக-வின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசிய விவகாரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்த மெகா குதிரை பேர விவகாரத்தில், எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய 3 பேரைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் இன்று எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை ஜூலை 15 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தவெக அரசை அசைத்துப் பார்க்க நினைத்த சதி கும்பலுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த அதிரடி சாட்டையடி, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
