ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரேடா பகுதியில், ஒரு மொபைல் போன் கடைக்குள் புகுந்த திருடர்கள் சுமார் 40 செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை கடை உரிமையாளர் லக்ஷ்மன் சென் கடையைத் திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடப்பதையும், போன் பெட்டிகள் காலியாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 4 முதல் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருடர்களில் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டிருப்பது பதிவாகியுள்ளது. அதே இரவில் அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு மொபைல் கடையிலும் திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
राजस्थान के भीलवाड़ा में चोर, नरेंद्र मोदी का मुखौटा लगाकर आए और दुकान से 40 मोबाइल चुराकर ले गए !! pic.twitter.com/jZWfdEjWcW
— Sachin Gupta (@Sachingupta) June 30, 2026
“>
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், முகமூடி அணிந்த அந்த மர்ம நபரையும், அவருடன் இருந்த கூட்டாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
