டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள கடை ஒன்றில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஐபோன் கேஸைத் திருடிச் சென்றதாகக் கடை உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கடையிலிருந்து பணம்கொடுக்காமல் கேஸை எடுத்துக்கொண்டு சுற்றுலா பயணி வெளியேறியதாகவும், அதைத் தடுக்க முயன்றபோது தன்னை அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்று வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ குறித்து இணையத்தில் கலவையான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்த, வீடியோவில் ஒரு பக்கக் காட்சிகள் மட்டுமே இருப்பதால் முழு உண்மையும் தெரியவில்லை என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

 

சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணியின் தரப்பு விளக்கம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு, இந்தச் சம்பவம் குறித்த புகாரும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கன்னாட் பிளேஸ் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.