உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில், பிரபலமான ‘ஹரியாலி தீஜ்’ திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையில்,  ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நடுரோட்டில் மிரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. ஹரியாலி தீஜ் விழாவைக் காண பிருந்தாவனில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் கடும் நெரிசல் ஏற்படவே, நிலைமையைச் சமாளிக்க காவல்துறையினர் தீவிரமான போக்குவரத்து மாற்றங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி அமித் பதக் (DSP Amit Pathak), அந்த வழியாக வந்த அலிகார் கோல்  தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் அனில் பராஷரின்கார் காவலாளியை வழிமறித்துள்ளார். மேலும், அந்த வாகனங்கள் அப்பகுதிக்கு வருவதற்கான முறையான அனுமதி விவரங்கள் குறித்தும் அவர் விசாரித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Newsat9 (@newsat9.in)

காவல்துறையின் இந்தப் சாதாரண சோதனையும் கேள்வி எம்எல்ஏ அனில் பராஷருக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனே தனது காரை விட்டு இறங்கிய அவர், கடமை நேரத்தில் நின்று கொண்டிருந்த டிஎஸ்பி அமித் பதக்கிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், எம்எல்ஏ அனில் பராஷர் தனது அதிகாரத்தைக் காட்டி டிஎஸ்பியை கடுமையாக எச்சரிப்பதோடு, அவரது ‘சீருடையைக் கழற்றிவிடுவதாக’ பகிரங்கமாக மிரட்டுகின்றன வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. திகாரியை ஒருமையில் மிரட்டிய இந்தச் செயல் கடும் கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது. இந்தக் வாக்குவாதத்தின் போது எம்எல்ஏவின் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். ஒருகட்டத்தில் நிலைமை கையை மீறிச் செல்லவே, அங்கு வந்த மற்றொரு போலீஸ் அதிகாரி இருவரையும் சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.