தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக எம்.பி மாணிக்கம் தாகூரை நியமித்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செல்வபெருந்தகை கூறியிருந்தார்.
தன்னை தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படி செல்வபெருந்தொகை மேல் இடத்திற்கு வலியுறுத்தி இருந்த நிலையில் தற்போது அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்த நிலையில் இந்த நடவடிக்கையில் செல்வபெருந்தகைக்கு உடன்பாடு இல்லை என்றே கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக பேசியதாக கூறி முதலமைச்சர் விஜய்க்கு செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நிலையில் அவர் திடீரென தலைமை பதவியில் இருந்து விலகியது பல்வேறு வியூகங்களை கிளப்பியுள்ளது.
