தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடப்பட்டிருந்த நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அந்த டெண்டரை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
அதாவது ஆவடி, வேலூர், நெல்லை, கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி இருந்தது. மேலும் இந்த திட்டத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அந்த டெண்டரை ரத்து செய்து அரசு அறிவித்துள்ளது.
