பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் கிருத்திகா குமாரி, தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டிய சூழலில், புதிய வீடு கிடைக்காததால் செப்டம்பர் வரை அதே வீட்டில் தங்க முடியுமா என்று தனது வீட்டு உரிமையாளரிடம் தயக்கத்துடன் கேட்டுள்ளார்.

வாடகை உயர்வு அல்லது வீட்டைக் காலி செய்யச் சொல்லும் உத்தரவு வரும் என்று கிருத்திகா எதிர்பார்த்த நிலையில், அவரது வீட்டு உரிமையாளர் மிக அன்புடன், “போகாதீர்கள், நீங்கள் இங்கே நீண்ட காலம் தங்குவதைத்தான் நான் விரும்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கிருத்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, அது தற்போது இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

வாடகைதாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே அன்றாடம் தகராறுகள் நிலவும் இன்றைய காலகட்டத்தில், இத்தகைய மனிதநேயமிக்க அணுகுமுறை பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. பணத்தையும் ஒப்பந்தங்களையும் தாண்டி, மனிதர்களுக்கு இடையேயான அன்பும் பரஸ்பர புரிதலும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

“>

 

அறிமுகம் இல்லாத ஒரு நகரத்தில் வசிக்கும் ஒருவருக்கு, வீட்டு உரிமையாளரின் இந்த அன்பான வார்த்தைகள் மிகுந்த ஆறுதலையும், அந்த இடத்தைத் தனது சொந்த ஊராக உணரச் செய்யும் உணர்வையும் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.