சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், தேர்தல் தோல்வி குறித்துக் குட்டிக்கதை கூறி “உங்க அப்பாவைக் காணோம்” என மறைமுகமாக விமர்சித்ததற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சட்டப்பேரவையில் ‘எங்க அப்பாவைக் காணோம்’ என சிலர் தேடிக் கேட்கிறார்கள்; ஆனால் நீங்கள் தேடும் இடத்தில் ஒருபோதும் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தவிப்போடும் துயரத்தோடும் தேடும் இடத்தில் அவர்களுக்கு உதவிட முதல் ஆளாக நான் நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சட்டமன்றத்தில் தற்பொழுது உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் எப்போதும் நீங்காத இடம்பிடித்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த 60 ஆண்டுகாலத் தனது பொதுவாழ்க்கை என்பது மக்களோடு மக்களாகவே பயணித்து வருவதாகவும், மக்கள் மனதில் தான் என்றும் நிலைத்திருப்பதாகவும் தவெக தலைமைக்குத் தனது கடுமையான கண்டனப் பதிலடியைப் பதிவு செய்துள்ளார்.

“>