தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூரைக் குறிப்பிட்டு மிகக் கடுமையான மற்றும் சுவாரசியமான விமர்சனங்களை முன்வைத்தார். முதலமைச்சர் தனது பெரம்பூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அது மக்கள் நலத்திட்டங்களில் இல்லை என்றும், மின்வெட்டுப் பிரச்சினையில்தான் பெரம்பூர் தொகுதி தற்போது முதலிடத்தில் உள்ளது என்றும் அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

​மேலும் ஆளுங்கட்சியினரைக் கலாய்க்கும் விதமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அண்ணன் பவருக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவரே போயிடுச்சே” என்று தற்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று சட்டமன்ற மேடையிலேயே போட்டு உடைத்தார். முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே மின்தடை இந்த லட்சணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த இந்த அதிரடியான குற்றச்சாட்டு விவாதக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.