“கோயில்ல போயி நம்ம முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசின்னு சொல்லி அர்ச்சனை பண்ணிடுங்க, பேனர் வச்சு காசை வீணாக்காதீங்க !” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தவெக தொண்டர்களுக்கு விடுத்துள்ள விசித்திரமான  வேண்டுகோள் வைத்துள்ளார்.

வரும் ஜூன் 22-ஆம் தேதி தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய் தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிகாரப்பூர்வப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்;

அதில், தேவையில்லாத ஆடம்பர பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இரத்ததான முகாம்கள் நடத்துதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, அவரவர் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வதோடு, திருக்கோவில்களில் முதலமைச்சரின் இயற்பெயரான “ச. ஜோசப் விஜய், பூசம் நட்சத்திரம், கடக ராசி” என்று கூறி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளது..