ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆகாஷ் குப்தா, கேப் டிரைவர் ஒருவருடன் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த டிரைவர் முன்பு மாதம் 25,000 ரூபாய் சம்பாதித்ததாகவும், தற்போது சுயமாகப் பணியாற்றுவதன் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை ஈட்டுவதாகவும் பகிர்ந்துள்ளார்.
இவரை ஒரு ‘கிக் தொழில்முனைவோர்’ என்று அழைத்த ஆகாஷ் குப்தா, இந்த நவீன பொருளாதாரத்தில் இது போன்ற சுயதொழில் செய்பவர்களே இந்தியாவின் வளர்ந்து வரும் புதிய நடுத்தர வர்க்கம் என்று பாராட்டியுள்ளார்.
இந்த வீடியோவிற்குப் பிறகு, தொழில்முனைவோர் மற்றும் சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. பலர், டிரைவரின் பணியை ‘தொழில்’ என்று சொல்வதை விட ‘சுயவேலைவாய்ப்பு’ என்று சொல்வதே பொருத்தமானது என கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
இதற்கிடையில், ஆகாஷ் குப்தா 2017-ல் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தைத் தொடங்கி, தற்போது மின்சார வாகனப் பிரிவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் அண்மையில் மின்சார வாகனக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 30 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் ‘ஈவால்வ்’ சவாலை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
