கொல்கத்தா தெருவில் நடந்து சென்ற ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம், உள்ளூர் வாலிபர் ஒருவர் முறையற்ற வகையில் வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பயனர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கோ ரோம்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரிக்‌ஷாவில் அமர்ந்திருக்கும் வாலிபர் ஒருவர் சுற்றுலாப் பயணியிடம் தொடர்ந்து வற்புறுத்தி, அவர் மறுத்தபோதிலும் கையைப் பிடித்து இழுப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொல்கத்தா போலீசாருக்கு இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருவதுடன், பயணிக்கு நேர்ந்த சங்கடமான சூழலுக்காகப் பலர் மன்னிப்பும் கோரியுள்ளனர்.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Marco Roams (@marcoroams)

“>

அதே வேளையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பொதுமைப்படுத்தப்பட்ட வாசகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சில பயனர்கள், சமூக ஊடகப் பார்வைகளுக்காக வேண்டுமென்றே இதுபோன்ற பகுதிகளுக்குச் சென்று வீடியோ பதிவிடுவதாகப் பயணி மீது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.