உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, காவல்துறை உதவி ஆய்வாளர் போல சீருடை அணிந்து வலம் வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரயாக்ராஜைச் சேர்ந்த ஷிவ்லால் பால் என்ற அந்த நபர், ஒரு நட்சத்திரம் பொறிக்கப்பட்ட காவல்துறை சீருடையை அணிந்து கொண்டு, தான் பணியில் சேர வந்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், அவரிடம் முறையான அடையாள அட்டையோ அல்லது பணி நியமன ஆணைகளோ இல்லை. அவர் நடந்து கொண்ட விதத்தில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, சிட்டி கோட்வாலி காவல்துறையினர் அவரை விசாரணைக்காகக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், அந்த நபர் போலி அதிகாரி போல வேடமிட்டு ஏன் ஆட்சியர் அலுவலகம் வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பொதுமக்களை ஏமாற்றினாரா அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முயற்சி செய்தாரா என்பது குறித்த விவரங்கள் விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“>

 

தற்போது அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.