மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இந்திய விமானப்படை வீரரின் 24 வயது மனைவியைப் போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற வழக்கில் அயாஸ் மதாரே (26), அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா என்ற மதகுருவைத் தேடித் தனிப்படை விரைந்துள்ளது. கடந்த 2025 பிப்ரவரி 8 அன்று, நிலம் வாங்குவது போல நடித்து அந்தப் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்ற அயாஸ் மதாரே, அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்துப் பலாத்காரம் செய்துள்ளான்.
அதனை ஆபாச வீடியோவாக எடுத்து, கணவரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ரூ.4 லட்சம் வரை பணத்தையும் பறித்துள்ளான். கடந்த மே 31 அன்று, அந்தப் பெண்ணைக் களம்மேஸ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்று, மத்தியப் பிரதேச மௌலானா மூலம் வலுக்கட்டாயமாக ‘குபூல் ஹை’ என்று கூற வைத்து, மாட்டிறைச்சி சாப்பிடக் கட்டாயப்படுத்தி, மதம் மாறிவிட்டதாகக் கூறி மீண்டும் கூட்டுப் பாலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இக்கொடூரச் சம்பவத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் தன்னை விட்டுவிடுமாறு அழுது கதறுவதும், அதைப் பொருட்படுத்தாத அயாஸ் மதாரே, பெண்ணின் கைகளைப் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு உருது மொழியில் ஏதோ மந்திரங்களை ஓதி அவர் முகத்தில் ஊதுவதும் பதிவாகியுள்ளது. வசியம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள திரவத்தைக் குடிக்க வைத்து அயாஸ் தன்னைச் சீரழித்ததாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சுரேஷ் ரெட்டி, “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் மாந்திரீகத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொபைல் வீடியோ உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மௌலானாவை கைது செய்யத் தனிப்படை மற்றொரு மாநிலத்திற்கு விரைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
