“இந்தியாவில் 10 வருஷம் வேலை பார்த்திருக்கேன், அங்க ஆபீஸ் டைம் முடிஞ்சு 6 மணிக்கு கிளம்புனா கூட ‘அதுக்குள்ள கிளம்புறீங்களா’ன்னு எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க!” என்று இந்தியாவில் நிலவும் நச்சுத்தன்மையான வேலை கலாச்சாரம் குறித்தும், ஐரோப்பிய நாட்டின் சிறந்த பணிச்சூழல் குறித்தும் இந்திய ஐடி ஊழியர் பிரதீப் பங்கஜ் சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் புயலையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, தற்போது கடந்த 4 ஆண்டுகளாக போலந்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் பிரதீப், இந்தியாவில் வேலை நேரத்தை தாண்டி உழைப்பது சாதாரண ஒன்றாகக் கருதப்படுவதாகவும், ஆனால் ஐரோப்பாவில் ஒருபோதும் மேனேஜர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கூடுதல் நேரம் வேலை வாங்க மாட்டார்கள் என்றும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pradeep Pankaj Singh (@mithila_to_europe)

“>

மேலும் போலந்து நாட்டில் கூடுதல் நேரம் வேலை பார்த்தால் வழக்கமான சம்பளத்தை விட 200 சதவீதம் அதாவது 2 மடங்கு அதிகமாக ஓவர்டைம் பணம் துல்லியமாக வழங்கப்படுவதாகவும், ஆபீஸ் நேரத்திற்குப் பிறகு மேனேஜர் கூப்பிட்டாலும் காலை அட்டெண்ட் செய்யாவிட்டால் யாரும் எதுவும் கேட்க முடியாது என்றும், ஒருவேளை பேசினால் அதற்குத் தனி அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இந்தியாவில் சரியான நேரத்திற்கு வீட்டுக்குக் கிளம்புவதே ஏதோ குற்றம் போலப் பார்க்கப்படுகிறது, இதனால்தான் ஆரோக்கியமான வேலை கலாச்சாரத்தை அனுபவித்தவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புவதில்லை” என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் குமுறல்களை கமெண்ட்டுகளில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.