அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் அம்மாநகரின் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்கக் கொடியின் படங்களைக் கொண்ட போஸ்டர்களை ஒட்டி விளம்பரப் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டது.
ஆனால், சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் உள்ள ‘எம்.டி செட்டபெல்லோ’ என்ற கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, டெல்லி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
Auto-rickshaw drivers in Delhi tore down the posters of Trump during US Independence Day celebrations after US military killed 3 Indian sailors off the coast of Oman. Bhai action liya jaaye is pe pic.twitter.com/UEWke5hV66
— Sagar Kumar (@SagarKumar21230) June 13, 2026
“>
இதனால் தங்கள் நாட்டு மாலுமிகளின் மரணத்திற்குப் பொறுப்பேற்காத அமெரிக்காவின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டெல்லி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த டிரம்ப்பின் போஸ்டர்களை ஆத்திரத்துடன் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் “அங்கு அவர்கள் நம் இந்தியர்களைக் கொன்று குவிக்கிறார்கள், நாம் ஏன் இந்த போஸ்டர்களை வைத்திருக்க வேண்டும்?” என்று முழக்கமிட்ட ஓட்டுநர்கள், மற்றவர்களையும் அந்த விளம்பரங்களை அகற்றுமாறு வலியுறுத்தி ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டனர்.
