பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள யமஹா இருசக்கர வாகன ஷோரூமின் மேலாளர், அங்கிருந்த முன்னாள் ஊழியர் ஒருவரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சோனு பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த முன்னாள் ஊழியர், மேலாளரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த அந்த நபர், மேலாளரின் முகத்தில் இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கியதோடு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய மீண்டும் வந்து கத்தியால் நெஞ்சில் பலமுறை குத்தியுள்ளார். அத்துடன் நிற்காமல், மீண்டும் இரும்பு கம்பியால் அவரது கழுத்து மற்றும் முகத்தைச் சிதைத்துள்ளார். இக்கொடூரக் கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
https://x.com/MeghUpdates/status/2065882733524779291?s=20
