வங்கதேசத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் கையில் அரிவாளுடன் மனைவியைத் துரத்திய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிகரெட் வாங்குவதற்கான பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு தனது மனைவியைத் தாக்க முயன்றுள்ளார்.
தன் குழந்தையைக் காப்பாற்றிக்கொள்ள அந்தப் பெண், அலறியபடி சாலையில் வேகமாக ஓடித் தப்பிக்க முயன்ற காட்சி காண்போரின் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளது.
பாதி வழியில் அந்தப் பெண் சாலையோரம் இருந்தவர்களிடம் உதவி கோரியதைக் கண்ட அங்கிருந்த மக்கள், உடனடியாகத் திரண்டு வந்து அந்த நபரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களின் கூட்டத்தைப் பார்த்து அந்த நபர் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டதால், அந்தப் பெண்ணும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Bangladesh🇧🇩: Kanglu chasing his wife with a sharp weapon because she didn’t give him money to smoke pic.twitter.com/0kqb9ChPOy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 11, 2026
“>
இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிகரெட் பணத்திற்காக ஒரு கணவன் தனது குடும்பத்தையே கொல்லத் துணிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகிறது.
