குருகிராமின் செக்டார் 56 பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பில், தனது முன்னாள் காதலியைத் தாக்கிய டெல்லி காவலர் ரோனித் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபிஏ படிக்கும் அந்த மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தை, அவரது மோசமான நடத்தையால் மாணவி முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த ரோனித், கடந்த வியாழக்கிழமை அதிகாலை போதையில் அந்தத் தார் வாகனத்தில் அங்கு வந்துள்ளார்.
மாணவியின் வீட்டிற்குள் நுழைய முயன்று தோல்வியடைந்த அவர், அவரது தாயையும் 15 வயது சகோதரியையும் கொலை மிரட்டல் விடுத்ததுடன், குடும்ப விழாவிற்குச் சென்று திரும்பிய மாணவியைத் தடுத்து நிறுத்தி, தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று சாலையில் வைத்துத் தாக்கியுள்ளார்.
தடுக்க வந்த இளைஞரைத் தாக்கியதுடன், அங்கிருந்து தப்பிச் செல்லும்போது தனது காரால் குடியிருப்பு வாயிலை மோதிச் சேதப்படுத்தியும் அவர் அட்டூழியம் செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் செக்டார் 56 காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
Delhi Police Constable brutally thrashed her ex in Gurugram
Gave rape threat to her sister
Gurugram court rejects BailA Gurugram court has rejected the bail plea of a Delhi Police constable accused of assaulting his former girlfriend and allegedly issuing rape threats to… pic.twitter.com/59PpZ87jpy
— Atulkrishan (@iAtulKrishan1) June 11, 2026
“>
தற்போது டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த ரோனித் யாதவ் நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டு, போண்ட்ஸி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
