தனது காதலி பூனைக்காக மிகுந்த பாசத்தோடு வேட்டையாடி ஒரு எலியைப் பரிசாகக் கொண்டு வந்த பூனைக்கு, அங்கே காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. காதலியின் இடத்திற்கு உற்சாகமாக வந்த அந்தப் பூனை, தனது காதலி வேறொரு ஆண் பூனையுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டது. பரிசாகக் கொண்டு வந்த எலியைக்கூடக் கீழே போட்டுவிட்டு, அந்தத் துரோகத்தைப் பார்த்த நொடி அது உறைந்து போன காட்சி பார்ப்பவர்களை நெஞ்சை அள்ளுகிறது.
Heartbreak is real 🥲 pic.twitter.com/LRU1qndWvO
— Lolflix (@lolflix_) June 10, 2026
மனிதர்களைப் போலவே பூனைகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. துரோகம் இழைத்த காதலியைக் கண்டு, கோபமோ அல்லது சோகமோ வெளிப்படுத்தாமல் அமைதியாக நின்ற பூனையின் முகபாவனை தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
