தமிழகத்தையே உலுக்கிய திருச்சி நர்சிங் மாணவியின் அகால உயிரிழப்புக்குத் தரமற்ற ‘டெக்ஸாமெதாசோன்’ என்ற மருந்து தான் காரணம் என்று தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட அந்தப் பேட்ச் மருந்தின் மூலக்கூறுகள் மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்துச் சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே வேளையில், உயிரிழந்த அந்த நர்சிங் மாணவியின் உடல் உறுப்புகளும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆய்வகத்தில் வைத்து விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நர்சிங் மாணவியின் மரணத்திற்குக் காரணமான மருந்து குறித்துப் பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த அதிரடி மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.