இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, தற்போது மேற்கு வங்காள அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்காள அமைச்சரவை விரிவாக்கத்தில், அவர் மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் முதல்வர் சுபேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். மைதானத்தில் தனது வேகமான பந்துவீச்சால் எதிரணிகளை மிரட்டிய டிண்டா, கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலும் தனது தீவிரத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
🚨 𝐁𝐈𝐆 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 : Joyel Murmu, Ashok Dinda, Anandamoy Burman, Santanu Pramanik, Purnima Chakraborty and Umesh Rai sworn in as ministers in West Bengal.#BreakingNews #WestBengal pic.twitter.com/mVaPiSrcpC
— VARTA ( वार्ता ) (@varta24news) June 1, 2026
“>
இந்நிலையில் மோயனா சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்தத் தொகுதியைப் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தது போலவே, இனிவரும் காலங்களில் அமைச்சராகவும் தனது பொறுப்புகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
