தமிழகத்தையே உலுக்கிய இளம் பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், கொலைக்குக் காரணமான முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது!
“இது தற்போதைய தமிழக அரசின் மிக நேர்மையான, துணிச்சலான ஆக்ஷன்!” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முதலமைச்சர் விஜய்யின் அரசைப் பாராட்டி நெகிழ்ச்சியோடு ட்வீட் செய்துள்ளார். தலித் இளைஞரான கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதில் இருந்தே குற்றவாளிகளுக்குப் பின்னணியாக இருந்த காவல் துறையைச் சேர்ந்த அந்தப் பெற்றோரையும் தூக்க வேண்டும் என விசிக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிலையில், விசிகவின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக, 10 மாத நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கொலையாளியின் தாய் கிருஷ்ணகுமாரி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த அதிரடி கைது நடவடிக்கை, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு பாயும் என்பதை மீண்டும் சத்தமாக நிரூபித்துள்ளது!
நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர்
கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்!தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்! pic.twitter.com/5WtO8EQhaE
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 29, 2026
“>
