குஜராத் மாநிலம் அங்க்லேஷ்வர் (Ankleshwar) பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டைச் சேர்ந்த முகேஷ் என்கிற காந்திலால் என்ற ஆட்டோ டிரைவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக ஜோதி ரத்தோடு என்ற கைம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், முகேஷின் மொபைல் போன் திடீரென சுவிட்ச் ஆஃப் ஆனதைத் தொடர்ந்து, அன்று மாலையே புல்லட் ரயில் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் அவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய அதிரடி கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலி ஜோதி ரத்தோடுக்கு, சஞ்சய் வசவா என்ற புதிய காதலனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இருவரும் சேர்ந்து ஜாலியாக வாழத் திட்டமிட்ட நிலையில், அதற்குப் பெரிய முள்ளாக இருந்த முன்னாள் காதலன் முகேஷை அக்மார்க் ஸ்கெட்ச் போட்டுத் தீர்த்துக் கட்டியுள்ளனர்.
இந்த விபரீதச் சம்பவத்தில், கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவரது புதிய காதலன் சஞ்சய் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
