உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகள் தொடர்ந்து தீவிரமடைந்தால், இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது 2064-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இத்தாலியின் மிலான் பல்கலைக்கழக இயற்பியலாளர் அலெசியோ சக்கோன் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
தற்போதைய நிலையில் உலக மக்கள் தொகை சுமார் 830 கோடியாக உள்ளது. 12 ஆயிரம் ஆண்டுக்கால மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்து, கணிதவியல் மாதிரிகளின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த மக்கள் தொகை வீழ்ச்சிக்கு முக்கியமாக நான்கு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம், அடுத்தடுத்து பரவக்கூடிய பெருந்தொற்றுகள், உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் போர்கள் மற்றும் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வளங்களின் பற்றாக்குறை ஆகியவையே அந்த காரணங்களாகும்.
மிலான் பல்கலைக்கழகத்தின் அலெசியோ சக்கோன் மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் மறைந்த ஆய்வாளர் கோஸ்ட்யா ட்ராசென்கோ ஆகிய இருவரும் இணைந்து, இந்த உலகளாவிய மக்கள் தொகை நெருக்கடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
